"புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஏற்பாடு" - அமைச்சர் ராஜ கண்ணப்பன்
புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் பழைய பேருந்துகளை பயன்படுத்துவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், முதலமைச்சரின் ஆலோசனைப்படி, கடந்த 6 மாதங்களாக போக்குவரத்து துறையை ஒழுங்குபடுத்தி, நல்லமுறையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் வெள்ள பாதிப்பில் பேருந்துகள் பாதிப்படையவில்லை, என தெரிவித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், பழைய பேருந்துகள் மிக விரைவில் சரி செய்யப்படும், என்றும் குறிப்பிட்டார்.
Comments